< Back
சினிமா செய்திகள்
12-த் பெயில் தம்பதிகளின் ஆட்டோகிராப்... ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த புகைப்படம் வைரல்
சினிமா செய்திகள்

12-த் பெயில் தம்பதிகளின் ஆட்டோகிராப்... ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த புகைப்படம் வைரல்

தினத்தந்தி
|
8 Feb 2024 8:52 PM IST

12-த் பெயில் படம் கடந்த டிசம்பர் 29ம் தேதி ஓடிடியில் வெளியான பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.

சென்னை,

விது சோப்ரா இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி வெளியான திரைப்படம் '12-த் பெயில்'. இந்தி, தமிழ், தெலுங்கு,கன்னடம் ஆகிய வெளியான இந்த படம் இந்திய விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், ஆனந்த் வி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி ஸ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ்ஸின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது.

இந்த படம் கடந்த டிசம்பர் 29ம் தேதி ஓடிடியில் வெளியான பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான பிலிம் பேர் விருதையும் வென்றது.

இந்நிலையில் மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா 12-த் பெயில் படத்தின் நிஜ தம்பதிகளான மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ், ஸ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆட்டோகிராப் பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், 'நான் பெருமையுடன் வைத்திருக்கும் அவர்களின் ஆட்டோகிராப்களை நான் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் வெட்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள்தான் உண்மையான நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் மனோஜ் குமார் சர்மா, ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி, ஐஆர்எஸ்.

அவர்களின் வாழ்க்கையை தழுவி உருவான '12-த் பெயில்'படத்தின் அசாதாரண ஜோடி. படத்தின் கதை அவர்களின் உண்மைக் கதையை தழுவியதாக அறிந்தேன். அவர்கள் நேர்மையான ஒருமைப்பாட்டு தத்துவத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். இந்தியா உலக வல்லரசாக மாற வேண்டுமானால், அதிகமான மக்கள் அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் அது வேகமாக நடக்கும். எனவே அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான பிரபலங்கள்' என பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்