ஆடியோ விவகாரம் - நடிகர் கார்த்திக் குமார் புகார்
|நடிகர் கார்த்திக் குமார் ஆடியோ விவகாரம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
சென்னை,
பின்னணி பாடகி சுசித்ரா. சமீபத்தில் சுசித்ரா அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதனைத்தொடர்ந்து கார்த்திக், சுசித்ராவிடம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியானது. அதில், "நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய் என்று தான் கேட்டேன். உன் வளர்ப்பு அப்படியில்லயே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதானா, நல்ல ஆச்சாரமான பிராமின்பேமிலில இருந்துதான வந்த..." இவ்வாறு பேசுகிறார்.
இந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பலரும் கார்த்திக்கின் பேச்சு தொடர்பாக விமர்சித்து வருகின்றனர். இதனால், நடிகர் கார்த்திக் குமார் அந்த ஆடியோ குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பகிர்ந்து விளக்கம் அளித்திருந்தார். அதில், "நான் இப்படி பேசவில்லை. அது என்னுடைய குரலும் இல்லை. இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்லை" இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் கார்த்திக் குமார் ஆடியோ விவகாரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் அல்ல என அந்த மனுவில் கார்த்திக் குமார் தெரிவித்துள்ளார்.