< Back
சினிமா செய்திகள்
பேஷன் ஷோவில் கவர்ச்சி உடை: சர்ச்சையில் சிக்கிய தமன்னா..!
சினிமா செய்திகள்

பேஷன் ஷோவில் கவர்ச்சி உடை: சர்ச்சையில் சிக்கிய தமன்னா..!

தினத்தந்தி
|
23 Oct 2023 9:51 PM IST

மும்பையில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் தமன்னா அணிந்திருந்த உடை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகைகள் அவ்வப்போது பேஷன் ஷோவிலும் கலந்துகொண்டு, கலக்கல் ஆடை அணிந்து ஒய்யார நடைபோடுவது வழக்கம். இதில் நடிகைகள் அணிந்து வரும் ஆடைகளும், அழகு சாதன பொருட்களும் பெரியளவில் கவனம் ஈர்க்கும்.

பேஷன் ஷோவில் உடலை இறுக்கமாக காட்டும் ஆடைகள் அணிந்து பிரபலங்கள் பங்கேற்பதும் டிரெண்டாகி வருகிறது.

அந்தவகையில் மும்பையில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் பிரபல பாலிவுட் நடிகைகள் தமன்னா, மலைக்கா அரோரா ஆகியோர் பங்கேற்றனர். பேஷன் ஷோவில் அவர்கள் அணிந்திருந்த கவர்ச்சிகரமான இறுக்கமான உடை பெரியளவில் கவனம் ஈர்த்தது.

இந்த உடையை அணிந்து அவர்கள் ஒய்யார நடை போட்டு பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். முன்னழகையும், பின்னழகையும் காட்டி விருந்து வைத்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இது சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. "பேஷன் ஷோ என்பதற்காக உடல் பாகங்களை அப்பட்டமாக காட்டும் வகையிலான உடைகள் அணியலாமா? பிரபலங்களே இப்படி செய்யலாமா? இது கவர்ச்சி அல்ல, இதுதான் ஆபாசம்'', என்று ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

உடைகள் அணிவது என்பது அவரவர் விருப்பம். இதையெல்லாம் விமர்சனம் செய்வது கூடாது என்றும் ஒருசாரார் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்