< Back
சினிமா செய்திகள்
கவனம் ஈர்க்கும் அதர்வா படத்தின்  டிரைலர்
சினிமா செய்திகள்

கவனம் ஈர்க்கும் அதர்வா படத்தின் டிரைலர்

தினத்தந்தி
|
3 March 2023 9:06 PM IST

இதையடுத்து இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இதில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இதையடுத்து இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டனர். இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்