'தண்டகாரண்யம்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய 'அட்டகத்தி' தினேஷ்
|'தண்டகாரண்யம்' படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் 'அட்டகத்தி' தினேஷ் தொடங்கியுள்ளார்.
சென்னை,
பிரபல இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அட்டகத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியால் அந்தப்படத்தின் பெயர் அவர் பின்னால் ஒட்டிக்கொண்டது.
தொடர்ந்து விசாரணை, குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தினேஷ் தற்போது தண்டகாரண்யம் படத்தில் நடித்து வருகிறா். இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள இந்த படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு பிரதிப் கலிராஜா ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தண்டகாரண்யம் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் அட்டகத்தி தினேஷ் தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது