< Back
சினிமா செய்திகள்
நிலத்தகராறில் நடிகை மீது தாக்குதல்
சினிமா செய்திகள்

நிலத்தகராறில் நடிகை மீது தாக்குதல்

தினத்தந்தி
|
6 July 2023 1:31 AM IST

பிரபல கன்னட நடிகை அனுகவுடா. இவர் சுதீப்புடன் கெம்ப கவுடா, விஷ்ணு வர்தனின் ஸ்கூல் மாஸ்டர், சிவராஜ் குமாரின் சுக்ரீவா, புனித் ராஜ்குமாருடன் பாய்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

கர்நாடக மாநிலம் சாகர் தாலுகாவில் உள்ள கஸ்பாடியில் அனுகவுடாவுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அவரது பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர். பெங்களூருவில் இருந்து அந்த இடத்திற்கு அனுகவுடா அடிக்கடி சென்று பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அனுகவுடாவின் விவசாய நிலம் தங்களுக்கே சொந்தம் என்று சிலர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர். இந்த தகராறு தீவிரமாகி அனுகவுடாவை தாக்கினார்கள். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அனுகவுடாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். நடிகை மீதான தாக்குதல் கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்