பஸ்சில் ஒருவன் என் டீ ஷர்டுக்குள்...வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்த நடிகை ஆண்ட்ரியா
|நடிகை ஆண்ட்ரியா 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
திருவனந்தபுரம்,
பிரபல நடிகை ஆண்ட்ரியா. தமிழ், தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னணி பாடல்களும் பாடி இருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த 2005-ம் ஆண்டு வெளியான, 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கிய திரைப்படம், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்த 'பச்சைக்கிளி முத்துச்சரம்' திரைப்படம்தான்.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி, ரீமாசென் ஆகியோர் நடித்திருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து, அளவுக்கு அதிகமான கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.
ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 'பிசாசு 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரும் இன்னும் இப்படம் வெளியாகாமல் உள்ளது. நடிகையாக மட்டும் இன்றி ஒரு பாடகியாகவும், ஜொலித்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சிறு வயதில் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான விஷயம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
அப்போது எனக்கு 11 வயது இருக்கும். நான் என் பெற்றோருடன் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். ஜீன்ஸ்,டீ ஷர்ட் அணிந்திருந்தேன். என் அப்பா அருகில் அமர்ந்திருந்தார். அப்போது என் டீ-ஷர்டுக்குள் மர்ம நபர் ஒருவர் கை விடுவதை உணர்ந்தேன். பின்னர் யாரிடமும் எதுவும் சொல்லாமல் அப்பா பக்கத்தில் பயத்துடன் அமர்ந்து கொண்டேன்.
இதை யாரிடமும் சொல்லாததற்கு என்ன காரணம் என அப்போது எனக்கு புரியவில்லை அழுகைதான் வந்தது .என தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த இந்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட பின்னர், ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.