< Back
சினிமா செய்திகள்
Atman Simbu spends time with fans on the sets of Thug Life! - Latest video
சினிமா செய்திகள்

'தக் லைப்' படப்பிடிப்பில் சிம்பு - ரசிகர்களை சந்திக்கும் வீடியோ வைரல்

தினத்தந்தி
|
27 May 2024 8:47 PM IST

படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு தனது ரசிகர்களை சந்தித்துள்ளார்.

சென்னை,

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்'. திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கியது.

சமீபத்தில், இதில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே, சிம்பு இதற்கு முன்பு நடிக்க ஒப்பந்தமான 'கொரோனா குமார்' படத்தில் நடித்து கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து தக் லைப் படத்தில் சிம்பு நடிக்க மாட்டாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஐசரி கணேஷ், "'தக் லைப்' படத்தில் சிம்பு நடிப்பதில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. அந்தப் படத்தை முடித்துவிட்டு எங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் வேண்டுகோள்" என்றார்.

இதனையடுத்து, சிம்பு தற்போது 'தக் லைப்' படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டு உள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்