< Back
சினிமா செய்திகள்
அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் புதிய தகவல்
சினிமா செய்திகள்

அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் புதிய தகவல்

தினத்தந்தி
|
2 Jun 2022 6:41 PM IST

இயக்குனர் அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் டைட்டில் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

2013-ம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார்.

தற்போது இயக்குனர் அட்லீ நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படமொன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அட்லீ அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அட்லீ இயக்கிவரும் ஷாருக்கான் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'ஜவான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் டைட்டிலுடன் கூடிய ஒரு டீசரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் இதர விவரங்கள் டீசருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்