< Back
சினிமா செய்திகள்
ஜவான் படம் 2-ம் பாகம் எடுக்க முடிவு...!
சினிமா செய்திகள்

'ஜவான்' படம் 2-ம் பாகம் எடுக்க முடிவு...!

தினத்தந்தி
|
19 Sept 2023 5:42 PM IST

‘ஜவான்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் இருப்பதாக அட்லி தெரிவித்து உள்ளார்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா ஜோடியாக நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியான 'ஜவான்' படம் வெற்றிகரமாக ஓடுகிறது. வசூல் ரூ.800 கோடியை தாண்டி உள்ளது. ரூ.1,000 கோடி வரை வசூலிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் 'ஜவான்' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் இருப்பதாக அட்லி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அட்லி அளித்துள்ள பேட்டியில், ''நான் எடுத்துள்ள படங்கள் அனைத்தும் முதல் பாகத்திலேயே முடிந்துவிடும் வகையிலேயே இருந்தன. அதுமாதியான கதைகளையே படமாக எடுப்பேன். அதுமட்டுமின்றி நான் இயக்கிய படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருந்தது இல்லை.

ஆனால் 'ஜவான்' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான கதை தயாரானதும் 'ஜவான்' 2-ம் பாகம் படத்தை நிச்சயம் இயக்குவேன்'' என்றார்.

மேலும் செய்திகள்