< Back
சினிமா செய்திகள்
குருவை மிஞ்சும் சிஷ்யன்: அல்லு அர்ஜுனுடனான படத்திற்கு அதிக சம்பளம் பெறும் அட்லீ
சினிமா செய்திகள்

குருவை மிஞ்சும் சிஷ்யன்: அல்லு அர்ஜுனுடனான படத்திற்கு அதிக சம்பளம் பெறும் அட்லீ

தினத்தந்தி
|
12 March 2024 7:19 PM IST

ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை கொடுத்த அட்லீ, தன்னுடைய அடுத்த படத்திற்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைப்பட இயக்குனர் அட்லீ 'ஜவான்' படத்தின் மூலம் மாபெரும் வெற்றி பெற்றார். மற்றொரு பிரமாண்ட படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா தெலுங்கு படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். தற்போது, அல்லு அர்ஜுன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். இது வைசாக்கில் படமாக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த ராஜா ராணி படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அட்லீக்கு அடுத்ததாக நடிகர் விஜய்யின் தெறி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட அவர், தெறி படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்து விஜய்யின் பிரிய இயக்குந்ர் லிஸ்ட்டில் இணைந்தார்.

நான்கு வெற்றிப் படங்களை கொடுத்த அட்லீக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்று ஷாருக்கான் உடன் கூட்டணி அமைத்த அட்லீ, அவரை வைத்து ஜவான் என்கிற மாஸ் படத்தை இயக்கினார். ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் மாஸ் படமாக ஜவான் இருந்ததால் அட்லீயை பாலிவுட் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. ஜவான் திரைப்படம் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி மாபெரும் வெற்றி பெற்றதால் பாலிவுட் நடிகர்கள் அவரை வைத்து படம் இயக்க காத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே அட்லீ, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன்படி அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் படத்தை இயக்க உள்ளார். அப்படத்தின் ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக அட்லீ 60 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் லிஸ்ட்டில் ஷங்கரை பின்னுக்கு தள்ள உள்ளார் அட்லீ.

மேலும் செய்திகள்