லியோ படத்தில் பிடித்த காட்சி என்று அட்லீ கூறியது இதையா?
|லியோ படத்தில் தனக்கு பிடித்த காட்சி எது என்று அட்லீ கூறினார்.
சென்னை,
தமிழில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதனைத்தொடர்ந்து இவர் இயக்கிய 'தெறி', 'மெர்சல்' மற்றும் 'பிகில்' போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.
இதன் பின்னர் ஷாருக்கான் நடித்து வெளியான 'ஜவான்' படத்தை இயக்கி அட்லீ பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது அட்லீ பாலிவுட்டை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லியோ படத்தை அட்லீ பாராட்டினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
'லியோ படத்தில் காபி கடையில் வரும் அந்த சண்டைக்காட்சிதான் எனக்கு பிடித்த ஒன்று. ஏனென்றால், அதில், ஒரு அப்பாவின் உணர்வை ஒரு அப்பாவாக தத்ரூபமாக வெளிப்படுத்தி இருந்தார் விஜய்', என்றார். மேலும், விஜய்யின் ஆவேசமான அவதாரத்தை வழங்கிய லோகேஷ் கனகராஜையும் அட்லீ பாராட்டினார்.
அட்லீ அடுத்ததாக ரஜினிகாந்த் மற்றும் சல்மான்கானை இணைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக அல்லு அர்ஜுனை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.