< Back
சினிமா செய்திகள்
Atlee directorial Salman Khan and Kamal Haasan - shooting to start next year?
சினிமா செய்திகள்

அட்லீ இயக்கத்தில் சல்மான் கான், கமல்ஹாசன் - அடுத்த வருடம் துவங்கும் படப்பிடிப்பு?

தினத்தந்தி
|
2 Sept 2024 9:00 PM IST

கமல்ஹாசன் மற்றும் சல்மான்கான் ஆகியோர் அட்லீயின் அடுத்த படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை,

'ராஜா ராணி' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் 'தெறி', 'மெர்சல்' மற்றும் 'பிகில்' என மூன்று பிளாக்பஸ்டர் படங்களையும் இயக்கினார். மக்கள் இப்படங்களை கொண்டாடி மகிழ்ந்தனர். அடுத்ததாக 2023-ம் ஆண்டு ஷாருக்கான் நடித்து வெளியான 'ஜவான்' படத்தை இயக்கினார். நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இப்படம் 1,200 கோடி ரூபாய் வசூல் செய்தது. அடுத்ததாக இவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால், இப்படத்தில் ரஜினி நடிக்கவில்லை என்றும் கமல்ஹாசன் மற்றும் சல்மான்கான் ஆகியோர் இணைந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில், அட்லீ இந்த இரு நடிகர்களையும் சந்தித்து பேசியதாக தெரிகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் மற்றும் சல்மான்கான் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இம்மாத இறுதியில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்