< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அதர்வாவின் 23-வது படம்
|13 Oct 2023 9:02 PM IST
நடிகர் அதர்வா புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
சென்னை,
அதர்வா 2010-ல் 'பாணா காத்தாடி' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். பரதேசி, இரும்பு குதிரை, கணிதன், இமைக்கா நொடிகள், குருதி ஆட்டம், பட்டத்து அரசன் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது 'டிஎன்ஏ' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது அதர்வாவுக்கு 23-வது படம் ஆகும். இதில் நாயகியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார்.
இவர் சமீபத்தில் வெளியான சித்தா படத்தில் நடித்து பிரபலமானவர். 'டிஎன்ஏ' படத்தை நெல்சன் வெங்கடேசன் டைரக்டு செய்கிறார். இவர் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிரைம் கதையம்சத்தில் தயாராவதாக அவர் தெரிவித்து உள்ளார். அம்பேத்குமார் தயாரிக்கிறார். முழு படமும் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது.