< Back
சினிமா செய்திகள்
அதர்வா நடிப்பில் வெளியான குருதி ஆட்டம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சினிமா செய்திகள்

அதர்வா நடிப்பில் வெளியான 'குருதி ஆட்டம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தினத்தந்தி
|
25 Aug 2022 8:29 PM IST

நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான 'குருதி ஆட்டம்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்த திரைப்படம் 'குருதி ஆட்டம்'. இந்த படத்தில் அதர்வா ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

'குருதி ஆட்டம்' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், 'குருதி ஆட்டம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 2-ந்தேதி 'ஆஹா' ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது

மேலும் செய்திகள்