< Back
சினிமா செய்திகள்
அதர்வா நடிக்கும் டிஎன்ஏ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
சினிமா செய்திகள்

அதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

தினத்தந்தி
|
11 Oct 2023 9:56 PM IST

அதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சென்னை,

கடந்த 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'ஃபர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார்.

இவர் தற்போது நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்துக்கு 'டிஎன்ஏ' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் இயக்குனர் பா.ரஞ்சித், இயக்குனர் எச்.வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்