< Back
சினிமா செய்திகள்
அதர்வா படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

அதர்வா படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
10 Feb 2023 10:58 PM IST

இது தொடர்பான போஸ்டரை விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 'டிரிக்கர்' 'பட்டத்து அரசன்' போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இவர் தற்போது அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி இணைந்துள்ளார். அன்னை பிலிம் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'தணல்' என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இது தொடர்பான போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்