< Back
சினிமா செய்திகள்
அதர்வா, மணிகண்டன் நடிக்கும் மத்தகம் வெப்தொடரின் டிரைலர் வெளியானது..!
சினிமா செய்திகள்

அதர்வா, மணிகண்டன் நடிக்கும் 'மத்தகம்' வெப்தொடரின் டிரைலர் வெளியானது..!

தினத்தந்தி
|
6 Aug 2023 10:26 PM IST

அதர்வா, மணிகண்டன் நடிக்கும் 'மத்தகம்' வெப்தொடரின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் 'மத்தகம்'. இந்த வெப்தொடரில் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த வெப்தொடருக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இந்த வெப்தொடர் ஆகஸ்ட் 18-ந்தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'மத்தகம்' வெப்தொடரின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக 'மத்தகம்' வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த தொடரின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்