< Back
சினிமா செய்திகள்
போலீஸ் கதையில் அதர்வா
சினிமா செய்திகள்

போலீஸ் கதையில் அதர்வா

தினத்தந்தி
|
17 Feb 2023 10:37 AM IST

அதர்வா நடிப்பில் கடந்த வருடம் `குருதி ஆட்டம்', `டிரிக்கர்', `பட்டத்து அரசன்' ஆகிய படங்கள் வந்தன. தற்போது `தணல்' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதில் நாயகியாக லாவண்யா திரிபாதி வருகிறார். அஷ்வின் காக்குமானு வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஷாரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ்வெங்கட், லட்சுமி பிரியா, பரத், தவுபிக், சர்வா. பிரதீப் விஜயன் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ரவீந்திர மாதவா டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ``வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும் என்ற கருவை மையமாக வைத்து, போலீஸ் திரில்லர் கதையாக தயாராகிறது. இதில் அதர்வா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன''. ஒளிப்பதிவு: சக்தி சரவணன், இசை: ஜஸ்டின் பிரபாகர். இந்தப் படத்தை ஜான்பீட்டர் தயாரிக்கிறார்.

மேலும் செய்திகள்