நடிகர்களின் பாதுகாவலர்களுக்கு வியக்க வைக்கும் சம்பளம்
|இந்தி நடிகர், நடிகைகள் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கவசம் மாதிரி பாதுகாவலர்களாக (பாடிகார்டு) பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை கேட்டால் ஆச்சரியம் வரும். அவர்கள் வாங்கும் சம்பளம் சிறிய கதாநாயகர்கள் வாங்கும் சம்பளத்துக்கு இணையாக உள்ளது என்கின்றனர்.
ஷாருக்கானின்ஷாருக்கானின் பாதுகாவலராக வேலை பார்க்கும் ரவிசிங் என்பவருக்கு மாத சம்பளம் ரூ.17 லட்சமாம். இவர் ஆண்டுக்கு ரூ.2.7 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார். 29 ஆண்டுகளாக சல்மான்கானிடம் பாதுகாவலர் ஆக பணியாற்றும் ஷேரா என்பவரின் மாத சம்பளம் ரூ.15 லட்சம். ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார்.
அக்ஷய்குமார் பாதுகாவலராக இருக்கும் சிரேய்சே தெஸ்லே ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம் பெறுகிறார். அமிதாப்பச்சனிடம் பாதுகாவலர் ஆக இருக்கும் ஜிதேந்திர சிண்டே ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்குகிறார். தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மாவிடம் பாதுகாவலர் ஆக வேலை பார்க்கும் ஜலால், பிரகாஷ் சிங் ஆகியோர் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம் பெறுகிறார்கள்.