அமலா பாலின் 'லெவல் கிராஸ்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
|அமலா பாலின் ‘லெவல் கிராஸ்’ படம் வரும் ஜூலை 26-ம் தேதி வெளியாகவுள்ளது.
மைனா, வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது 2014-ல் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
பின்னர் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு படங்களில் அவர் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார். அதன் உச்சமாக ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தார்.
இயக்குனர் விஜய் உடனான மண முறிவுக்குப் பிறகு, சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவர், கடந்த ஆண்டு தனது நண்பர் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். கர்ப்ப காலத்தில் தனது மகிழ்ச்சி மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு யோகா செய்வது, தியானம் என அமைதியான முறையில் நாட்களை நகர்த்தி வந்தார்.
அமலாபால் நடிப்பில் கடைசியாக வெளியான தி டீச்சர், போலா, ஆடு ஜீவிதம் படங்கள் நல்ல கவனம் பெற்றன. தற்போது பிரபல இயக்குநர் ஜித்து ஜோசப் வழங்கும் லெவல் கிராஸ் படத்தில் நடித்துள்ளார். ஜித்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக இருந்த அர்பாஜ் அயூப் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.இந்தப் படம் வரும் ஜூலை 26-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில்தான் நடிகை அமலா பால் பாடகியாக முதல்முறையாக அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.