அசோக் செல்வன் நடிக்கும் 'நித்தம் ஒரு வானம்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
|நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'நித்தம் ஒரு வானம்' படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ரிது வர்மா சுபா என்ற மாடர்ன் பெண் கதாபாத்திரத்திலும் அபர்ணா பாலமுரளி மதி என்ற கிராமத்து பெண் கதாபாத்திரத்திலும், ஷிவாத்மிகா ராஜசேகர் மீனாட்சி என்ற கல்லூரி பெண் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதுகுறித்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.