< Back
சினிமா செய்திகள்
அசோக் செல்வன், சரத்குமார் நடிக்கும் போர் தொழில் திரைப்படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடிக்கும் 'போர் தொழில்' திரைப்படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
17 May 2023 1:06 AM IST

‘போர் தொழில்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

'தெகிடி', 'ஓ மை கடவுளே' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.



மேலும் செய்திகள்