< Back
சினிமா செய்திகள்
அசோக் செல்வன், சரத்குமார் நடிக்கும் போர் தொழில் படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ்
சினிமா செய்திகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடிக்கும் 'போர் தொழில்' படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ்

தினத்தந்தி
|
7 Jun 2023 12:40 AM GMT

‘போர் தொழில்’ திரைப்படம் வரும் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

'தெகிடி', 'ஓ மை கடவுளே' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், 'போர் தொழில்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'போர் தொழில்' படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படம் வரும் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்