< Back
சினிமா செய்திகள்
வைபவ் படத்தின் மூன்றாவது பாடலை வெளியிட்ட அசோக் செல்வன்
சினிமா செய்திகள்

வைபவ் படத்தின் மூன்றாவது பாடலை வெளியிட்ட அசோக் செல்வன்

தினத்தந்தி
|
15 Feb 2024 4:01 AM IST

'ரணம்' திரைப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

ஷெரிப் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள திரைப்டம் 'ரணம்'. வைபவின் 25-வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, பதமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அரோள் கரோலி இசையமைத்துள்ளார். பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். முனீஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 'ரணம்' திரைப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலான 'பொல்லாத குருவி' பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை நடிகர் அசோக் செல்வன் வெளியிட்டுள்ளார். ஷெரிப் எழுதியுள்ள இந்த பாடலை ரங்கோதம் மற்றும் ஷெரிப் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்