அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனின் 'ரயிலின் ஒலிகள்' பாடல் வெளியானது..!
|அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் நடிக்கும் 'புளூ ஸ்டார்' படத்தின் பாடல் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் இன்று திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களின் நடிப்பில் உருவான 'ரயிலின் ஒலிகள்' காதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. உமாதேவி எழுதியுள்ள இந்த பாடலை பிரதீப் குமார் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.