< Back
சினிமா செய்திகள்
அசோக் செல்வன், சாந்தனு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
சினிமா செய்திகள்

அசோக் செல்வன், சாந்தனு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

தினத்தந்தி
|
1 Feb 2023 10:03 PM IST

நடிகர் அசோக் செல்வன், சாந்தனு நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்கும் புதிய படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தமிழழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அரக்கோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்