< Back
சினிமா செய்திகள்
என்னை பொருத்தவரை இதுதான் சிறந்த படம் - இயக்குனர் எச்.வினோத்
சினிமா செய்திகள்

என்னை பொருத்தவரை இதுதான் சிறந்த படம் - இயக்குனர் எச்.வினோத்

தினத்தந்தி
|
14 Sept 2024 12:37 PM IST

இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக விஜய் நடிக்கும் 'தளபதி 69' என்ற படத்தை இயக்க உள்ளார்.

சென்னை,

இரா. எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியாக உள்ள புதிய படம் 'நந்தன்'. சசிகுமார் இந்த படத்தில் கதாநாயகனாக, இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை 'உடன்பிறப்பே' என்ற படத்தை இயக்கிய ரா.சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் எச்.வினோத் கலந்து கொண்டார். அதில் 'என்னைப் பொருத்தவரை எது நல்ல படம் என்றால் பெரிய பட்ஜெட் கொண்ட படமோ, பெரிய நடிகர்கள் நடிக்கும் படமோ அல்லது பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்யும் படமோ அல்ல. ஒரு சராசரி மனிதனை இன்னும் மேம்பட்ட மனிதனாக மாற்றும் அல்லது மாற்ற முயற்சிக்கும் படங்களே சிறந்த படமாகும். எனவே நந்தன் படம் ஒரு சிறந்த படமாகும். அனைவரும் திரையரங்குகளில் வந்து இப்படத்தை பார்த்து ஆதரவு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்