< Back
சினிமா செய்திகள்
ஆர்யா படம் 2-ம் பாகம்
சினிமா செய்திகள்

ஆர்யா படம் 2-ம் பாகம்

தினத்தந்தி
|
28 July 2022 3:46 PM IST

ஆர்யா நடிப்பில் வெளியாகி ஹிட்டான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழில் எந்திரன், சண்டக்கோழி, சாமி, விஸ்வரூபம், வேலை இல்லா பட்டதாரி போன்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம், அரண்மனை படங்கள் 3 பாகங்களாக வெளியானது.

தற்போது கமலின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. தெலுங்கில் எடுத்து மற்ற மொழிகளிலும் வெளியிடப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா-நயன்தாரா ஜோடியாக நடித்து 2010-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் நகைச்சுவை கதையம்சத்தில் தயாராகி இருந்தது. முதல் பாகத்தில் நகைச்சுவை வேடத்தில் வந்த சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். நயன்தாரா இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் இரண்டாம் பாகத்தில் நடிப்பார்களா என்பது உறுதியாகவில்லை.

மேலும் செய்திகள்