< Back
சினிமா செய்திகள்
மீண்டும் ரீ-ரிலீசாகும் ஆர்யாவின் பாஸ் (எ) பாஸ்கரன் திரைப்படம் - ரசிகர்கள் மகிழ்ச்சி
சினிமா செய்திகள்

மீண்டும் ரீ-ரிலீசாகும் ஆர்யாவின் பாஸ் (எ) பாஸ்கரன் திரைப்படம் - ரசிகர்கள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
18 March 2024 1:05 PM IST

பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.

சென்னை,

தமிழில் வெற்றி பெற்ற பழைய படங்களை புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்யும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்க ராஜேஷ் இயக்கி இருந்த திரைப்படம் பாஸ் (எ) பாஸ்கரன். இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஆர்யாவின் நண்பராக சந்தானம் நடித்திருந்தார்.

படத்தில் சந்தானம் பேசிய நண்பேன்டா வசனம் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் 22ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஆர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்