< Back
சினிமா செய்திகள்
மிஸ்டர் எக்ஸ் படத்துக்காக மாஸாக மாறிய ஆர்யா - வைரல் புகைப்படம்

image courtecy;twitter@arya_offl

சினிமா செய்திகள்

'மிஸ்டர் எக்ஸ்' படத்துக்காக மாஸாக மாறிய ஆர்யா - வைரல் புகைப்படம்

தினத்தந்தி
|
19 March 2024 12:25 PM IST

மனு ஆனந்த் இயக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.

சென்னை,

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'எப்.ஐ.ஆர்.' படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், அடுத்ததாக 'மிஸ்டர் எக்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஆர்யா நடிக்கின்றார். மேலும், சரத்குமார், மஞ்சு வாரியர், கவுதம் கார்த்திக், அனேகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், படத்திற்காக ஜிம்மில் கடுமையாக வொர்க்அவுட் செய்து உடம்பை முறுக்கேற்றி மாஸாக மாறியுள்ளார் ஆர்யா . இது தொடர்பாக ஆர்யா தனது எக்ஸ் தளத்தில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உடல் பருமனாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் தற்போது உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆர்யாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்