< Back
சினிமா செய்திகள்
சந்தானத்திடம் தூது செல்லும் ஆர்யா
சினிமா செய்திகள்

சந்தானத்திடம் தூது செல்லும் ஆர்யா

தினத்தந்தி
|
31 July 2022 3:14 PM IST

‘பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். சந்தானத்தை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் நடிகர் ஆர்யா உறுதியாக இருக்கிறார்.

நகைச்சுவை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய சந்தானம், படிப்படியாக காமெடி நடிகராக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். 2014-ம் ஆண்டு 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பிறகு 'இனிமேல் இப்படிதான்', 'டகால்டி', 'பிஸ்கோத்', 'பாரிஸ் ஜெயராஜ்', 'டிக்கிலோனா', 'சபாபதி', 'குலு குலு' போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

பெரிய கதாநாயகர்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த போதும், 'ஹீரோவாகத்தான் நடிப்பேன்' என்ற கொள்கையில் சந்தானம் உறுதியாக இருக்கிறார்.

இந்த நிலையில் 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். 2010-ம் ஆண்டில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக ஆர்யா-சந்தானம் இடையேயான நகைச்சுவை காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக அமைந்தது.

எனவே தற்போது உருவாகும் இந்த புதிய படத்திலும் சந்தானம் நகைச்சுவையில் கலக்க வேண்டும் என பட குழுவினர் விரும்புகிறார்கள். ஆனால் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம், தற்போதுள்ள சூழ்நிலையில் இதற்கு ஒப்புக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆனால் சந்தானத்தை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் நடிகர் ஆர்யா உறுதியாக இருக்கிறார். இதனால் தூது புறாவாய் இருந்து சந்தானத்தை அவர் தாஜா செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்