சம்பளத்தை உயர்த்தினார் ஆர்யா
|முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்க ஆர்யா ரூ.10 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.
ஆர்யா சமீபத்தில் நடித்த படங்கள் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை தேடித்தரவில்லை. 'சார்பட்டா' படத்துக்கு பிறகு அவர் நடித்த 'எனிமி', 'கேப்டன்' படங்கள் தோல்வியை தழுவின. இதனால் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்யா இருக்கிறார்.
இப்படி அடுத்தடுத்த படங்கள் தோல்வி அடைந்த நிலையிலும் தனது சம்பளத்தை 2 மடங்காக ஆர்யா உயர்த்தி இருக்கிறார் என்கிறார்கள். முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்க அவர் ரூ.10 கோடி சம்பளம் கேட்டுள்ளார். தயாரிப்பாளர் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தபோதும் சம்பள விஷயத்தில் ஆர்யா விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார். அவர் கேட்ட சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது.
தயாரிப்பாளர்கள் ஆர்யாவை அணுக தயக்கம் காட்டி வருகிறார்கள். 'என்னதான் இருந்தாலும் இப்படி கெடுபிடி காட்டலாமா?' என்று தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறாராம் ஆர்யா.