< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கிராமத்து கதையில் புதிய தோற்றத்தில் ஆர்யா
|16 Dec 2022 9:33 AM IST
‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படத்தில் ஆர்யா தோற்றத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஆர்யா நடிப்பில் இந்த வருடம் 'கேப்டன்' படம் வந்தது. அடுத்து முத்தையா டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்துக்கு 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்று பெயர் வைத்துள்ளனர். ஆர்யா தோற்றத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
முத்தையா ஏற்கனவே 'கொம்பன்', 'மருது' உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யா ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார். இவர் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர். கிராமத்துப் பின்னணியைக் கொண்ட கதையம்சத்தில் படம் தயாராகிறது.
ஏற்கனவே முத்தையா எடுத்த கிராமத்து படங்கள் வெற்றி பெற்றதால் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.