< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
புதிய தோற்றத்தில் ஆர்யா
|1 Sept 2023 1:55 PM IST
ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன.
இந்த நிலையில் தற்போது 'சைந்தவ்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நீண்ட தலைமுடி, ஸ்டைலான தோற்றத்தில் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு இருக்கும் ஆர்யாவின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இது வலைத்தளத்தில் வைரலாகிறது.
இந்த படத்தில் வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, சாரா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சைலேஷ் கொலானு டைரக்டு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.