< Back
சினிமா செய்திகள்
ஆர்யா- கவுதம் கார்த்திக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
சினிமா செய்திகள்

ஆர்யா- கவுதம் கார்த்திக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

தினத்தந்தி
|
2 May 2023 10:44 PM IST

இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மனு ஆனந்த் தற்போது பிரின்ஸ் பிக்சர் தயாரிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கிறார். இப்படத்தில் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு மிஸ்டர்.எக்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகவுள்ளது. மேலும் இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்