சூர்யா விலகிய படத்தில் அருண்விஜய்
|சூர்யாவுக்கு பதிலாக வணங்கான் படத்தில் அருண் விஜய்யை நடிக்க வைக்க பாலா பரிசீலிப்பதாக புதிய தகவல் பரவி உள்ளது.
பாலா இயக்கிய 'வணங்கான்' படத்தில் இருந்து சூர்யா சமீபத்தில் விலகியது பரபரப்பானது. இந்த படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினர். சூர்யாவும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். ஆனால் திடீரென்று படப்பிடிப்பு நின்று போனது. சூர்யாவுக்கும், பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்தை நிறுத்தி விட்டதாக பேசினர். அதன்பிறகு சூர்யா வேறு படங்களில் நடிக்க போய் விட்டார். இதனால் வணங்கான் படம் கைவிடப்பட்டு விட்டதாகவும் தகவல் பரவியது.
இந்த நிலையில்தான் 'வணங்கான்' படத்தில் இருந்து சூர்யா விலகியதை பாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனாலும் வணங்கான் படப்பிடிப்பு தொடரும் என்றும் கூறினார். இதையடுத்து சூர்யாவுக்கு பதிலாக வணங்கான் படத்தில் நடிக்கபோவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதர்வாவிடம் பேசி வருவதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனாலும் அது உறுதியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் சூர்யாவுக்கு பதிலாக வணங்கான் படத்தில் அருண் விஜய்யை நடிக்க வைக்க பாலா பரிசீலிப்பதாக புதிய தகவல் பரவி உள்ளது. படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளனர்.