ஓடிடியில் வெளியானது அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர் 1 '
|‘மிஷன் சாப்டர் 1 ' தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'மிஷன் சாப்டர் -1 '. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஆரவாரம் இல்லாமல் வெளியான அருண் விஜய்யின் 'மிஷன் சேப்டர் 1' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அப்பா - மகள் சென்டிமென்ட்டை மையமாகக் கொண்டும் இந்த படத்தின் கதைகளம் அமைந்திருந்தது. வெளிநாட்டில் சிக்கிக் கொள்ளும் அருண் விஜய் எப்படி அதிலிருந்து தப்பி உடல் நிலை பாதிக்கப்பட்ட தன்னுடைய மகளையும் காப்பாற்றுகிறார் என்பதாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.
இந்த படம் முழுக்க முழுக்க லண்டனிலேயே படமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சிறப்பான வசூலை பெற்றது.
மிஷன் சாப்டர் 1 ஏழு வாரங்கள் கடந்தும் ஓடிடி இல் வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில், மிஷன் சாப்டர் 1 தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. பொதுவாக ஒரு படம் வெளியாகி 4 வாரங்களில் ஓடிடிக்கு வந்துவிடும். மிஷன் சாப்டர் 1 எட்டு வாரங்கள் கழித்து ஓடிடிக்கு வந்துள்ளது. படத்தைத் தவறவிட்டவர்கள் அமேசான் ஓடிடி தளத்தில் ஆங்கில சப்டைட்டிலுடன் படத்தைக் கண்டு ரசிக்கலாம்.
இந்த படம் திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஓடிடியிலும் அதிகமான பார்வைகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.