< Back
சினிமா செய்திகள்
அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
சினிமா செய்திகள்

அருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

தினத்தந்தி
|
7 Jun 2024 8:36 PM IST

கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் 'ரெட்ட தல'.

சென்னை,

நடிகர் அருண் விஜய் தற்போது 'மான் கராத்தே' படத்தை இயக்கிய கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அருண் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படத்துக்கு 'ரெட்ட தல' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகிகளாக சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஜி யூனிவர்சல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்