< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
புதிய பாடலை வெளியிட்ட அருண் விஜய் படக்குழு
|4 Jan 2024 10:12 PM IST
அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணே செல்ல கண்ணே' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரவி.ஜி, உத்ரா உன்னி கிருஷ்ணன் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.