< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்
|19 Nov 2023 8:58 PM IST
அருண் விஜய்யின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் கவரக்கூடியவை.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வெளிவந்த "யானை" திரைப்படம் அருண் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், அருண் விஜய்யின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் கவரக்கூடியவை.
தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் 'வணங்கான்'. ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் அருண் விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் சென்னையில் உள்ள 'உதவும் கரங்கள்' ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து ரத்த தானம் வழங்கினார்.