< Back
சினிமா செய்திகள்
புதிய தோற்றத்தில் அருள்நிதி
சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் அருள்நிதி

தினத்தந்தி
|
7 Jun 2022 3:32 PM IST

புதிய படத்துக்காக முரட்டு மீசையுடன் நடிகர் அருள்நிதி வித்தியாசமான தோற்றம் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வம்சம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அருள்நிதி தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். அவரது நடிப்பில் வந்த 'டிமாண்டி காலனி' பேய் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

மவுனகுரு படமும் திரும்பி பார்க்க வைத்தது. உதயன், தகராறு, ஆறாது சினம், பிருந்தாவனம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது அவரது கைவசம் டைரி, டி பிளாக், தேஜாவு ஆகிய 3 படங்கள் உள்ளன. இதில் 'டி பிளாக்' படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் ஜோதிகா நடித்த ராட்சசி படத்தை எடுத்து பிரபலமான கவுதம் ராஜ் இயக்கும் படத்தில் நடிக்க அருள்நிதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் அருள்நிதியின் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். அதில் முரட்டு மீசையுடன் மிரட்டலாக இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்