அருள்நிதி நடிக்கும் 'டைரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
|நடிகர் அருள்நிதி நடித்துள்ள 'டைரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் அருள்நிதி நடிப்பில் கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியான 'தேஜாவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அருள்நிதி நடித்துள்ள படம் 'டைரி'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார்.
இவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து 'டைரி' படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யோகான் இசையமைத்துள்ளார்.
திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'டைரி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'டைரி' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.