< Back
சினிமா செய்திகள்
புதிய படங்களில் அருள்நிதி
சினிமா செய்திகள்

புதிய படங்களில் அருள்நிதி

தினத்தந்தி
|
12 April 2023 8:15 AM IST

வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் அருள்நிதி. தற்போது அவரது நடிப்பில் திருவின் குரல் படம் வெளியாக இருக்கிறது. மேலும் 5 புதிய படங்களில் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து அருள்நிதி அளித்துள்ள பேட்டியில், "நான் அதிக திகில் படங்களில் நடித்து இருக்கிறேன். ஹரிஷ் பிரபு இயக்கிய திருவின் குரல் படத்தில் வாய்பேசாத இளைஞராக வருகிறேன். ஆத்மிகா நாயகியாக வருகிறார். உடல் நிலை சரியில்லாத தந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்போது நடக்கும் சம்பவங்களே படம்.

சில படங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும், இதுவும் அப்படியான ஒரு உணர்வுப்பூர்வமான படம். பாரதிராஜாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். வம்சம் படம் 2-ம் பாகத்தில் நான் நடிக்க இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

அறிமுக டைரக்டர் வெங்கி இயக்கும் படத்தில் நான் நடிக்க இருக்கிறேன். அந்த படத்துக்கு பாண்டிராஜ் கதை, திரைக்கதை எழுதுகிறார். அது விவசாயம் சம்பந்தமான கதை. தொடர்ந்து கவுதம் ராஜ் இயக்கும் கழுவேத்தி மூர்க்கன், டிமாண்டி காலனி 2-ம் பாகம் மற்றும் அடங்க மறு இணை இயக்குனர் விஜய் இயக்கும் படம், இன்னாசி பாண்டியன் இயக்கும் படங்களிலும் நடிக்க இருக்கிறேன்.

எதிர்காலத்தில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தால் நடிப்பேன்'' என்றார்.

மேலும் செய்திகள்