கிராமத்து பின்னணியில் நடிக்கும் அருள்நிதி
|அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இதில் நாயகியாக துஷாரா விஜயன் மற்றும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், ராஜசிம்மன், யார் கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கவுதமராஜ் டைரக்டு செய்துள்ளார்.
படம் பற்றி அவர் கூறும்போது, "கிராமத்து பின்னணியில் நடக்கும் அரசியல் கதையே இந்தப் படம். சமூகத்தில் மக்களை ஓட்டுக்காக அரசியல்வாதிகள் எப்படி தயார் செய்கிறார்கள் என்பதும், அவர் களுக்கு கட்டுப்பட மறுக்கும் ஒரு சாமானிய இளைஞன் கோபத்தோடு அதை எதிர்த்து எப்படி கிளம்புகிறான் என்பதும் திரைக்கதையாக இருக்கும்.
காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள், ஆக்ஷன் உள்ளிட்ட அனைத்து கமர்ஷியல் அம்சங்களோடு படம் தயாராகி உள்ளது. வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதி இந்தப் படத்தின் கதையை கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். அனைத்துப் பகுதி மக்களும் கதையில் தங்களை தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். கழுமரம் படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும்'' என்றார். அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இசை: இமான், ஒளிப்பதிவு: ஶ்ரீதர்.