< Back
சினிமா செய்திகள்
அருள் நிதியின் புதிய படம்
சினிமா செய்திகள்

அருள் நிதியின் புதிய படம்

தினத்தந்தி
|
10 March 2023 10:07 AM IST

அருள் நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'திருவின் குரல்' என்று பெயர் வைத்துள்ளனர். நாயகியாக ஆத்மிகா நடிக்கிறார். பாரதிராஜா, சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன், முல்லையரிசி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஹரிஷ் பிரபு டைரக்டு செய்து இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, புரியாத புதிர் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

படம் பற்றி அவர் கூறும்போது, ''கதாநாயகன் கதாபாத்திரம் பேச்சு குறைபாடு இருப்பவராக வடிவமைக்கப்பட்டு உள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே அழகான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை படம் பேசும். படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது'' என்றார். இசை: சாம்.சி.எஸ். ஒளிப்பதிவு: சிண்டோ போடுதாஸ். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் செய்திகள்