< Back
சினிமா செய்திகள்
ரூ.100 கோடி வசூலைத் தாண்டிய ஆர்டிகள் 370 திரைப்படம்
சினிமா செய்திகள்

ரூ.100 கோடி வசூலைத் தாண்டிய "ஆர்டிகள் 370" திரைப்படம்

தினத்தந்தி
|
22 March 2024 6:55 PM IST

"ஆர்டிகள் 370" திரைப்படம் பா.ஜ.க. அரசுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிக்கவே உருவாக்கப்பட்டதாக சர்சை எழுந்தது.

சென்னை,

இமாசலில் பிறந்த நடிகை யாமி கவுதம் முதலில் மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியில் முழுநேர நடிகையாக இருந்து வருகிறார். தனது முதல் இந்தி படமான விக்கி டோனர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

2016இல் ஜெய் உடன் தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் பெரிதாக ஹிட் அடிக்காத இவரது படங்கள் இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. யாமி கவுதம், பிரியாமணி இணைந்து இதில் நடித்துள்ளார்கள்.

பா.ஜ.க. அரசுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிக்கவே இந்தப் படம் உருவாக்கப்பட்டதாக சர்சை எழுந்தது. பின்னர் இயக்குநர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து "ஆர்டிகள் 370" திரைப்படம் பிப்.23-ம் தேதி வெளியாகியது. இந்தப் படத்தினை தயாரித்தது யாமி கவுதமின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. இந்தியாவில் ரூ.69 கோடி வசூல் செய்துள்ளது. "ஆர்டிகள் 370" திரைப்படத்தில் யாமி கவுதமின் சண்டைக் காட்சிகள் பெரிதும் கவனம் பெற்றுள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்