< Back
சினிமா செய்திகள்
பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகர் அர்ஜூன் தாஸ்..!
சினிமா செய்திகள்

பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகர் அர்ஜூன் தாஸ்..!

தினத்தந்தி
|
1 July 2022 2:04 PM IST

நடிகர் அர்ஜூன் தாஸ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து 'மாஸ்டர்', 'விக்ரம்' திரைப்படங்கள் இவருக்கு மேலும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு புதுமுகங்களைக் கொண்டு இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் 'அங்கமாலி டைரீஸ்'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அடுத்ததாக அர்ஜுன் தாஸ் வசந்த பாலன் இயக்கும் 'அநீதி' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்