< Back
சினிமா செய்திகள்
அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ரசவாதி படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'ரசவாதி' படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
29 April 2024 8:43 AM GMT

இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள திரைப்படம் 'ரசவாதி'.

சென்னை,

மௌனகுரு, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் சாந்தகுமார். இவர் தற்போது 'ரசவாதி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சிவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, 'ரசவாதி' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த டிரைலரை திரைத்துறை பிரபலங்கள் லோகேஷ் கனகராஜ், அனிருத், கார்த்தி, கார்த்திக் சுப்பராஜ், துல்கர் சல்மான், எஸ்.ஆர் பிரபு ஆகியோர் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளனர்.

மேலும் செய்திகள்