அர்ஜுன்தாஸ் நடித்துள்ள 'ரசவாதி' படத்திற்கு யுஏ சான்றிதழ்
|'ரசவாதி' திரைப்படம் வருகிற 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
மௌனகுரு, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் சாந்தகுமார். இவர் தற்போது 'ரசவாதி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சிவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'ரசவாதி' திரைப்படம் வருகிற 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
யூடியூபில் இதுவரை 30 லட்ச பார்வையை 'ரசவாதி' டிரைலர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜூன் தாஸ் இப்படத்தில் ஒரு சித்த மருத்துவராக நடித்துள்ளார். ஒரு மருத்துவர் அவரது கோடை விடுமுறையை செலவிடுவதற்காக மலை கிராமத்திற்கு வருகிறார். அதன் பிறகு இவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை பற்றி பேசக்கூடிய படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் படத்தின் பாடலான சாரல் சாரல் பாடல் வெளியாகியது. தற்பொழுது சென்சார் போர்டு 'ரசவாதி' திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்கு அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ்.லைப் டைம் செட்டில்மெண்ட் என்ற வசனத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார்.